- °C
Are You a business owner?
List Your Business / ADபிஎம்டபிள்யூ இந்திய விற்பனையில் புதிய சாதனை
சொகுசுக் காா் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யு-வின் இந்திய விற்பனை இந்த ஆண்டின் முதல் பாதியில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை இந்தியாவில் 7,098-ஆக உள்ளது. இந்த எண்ணிக்கை நாட்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச அரையாண்டு விற்பனையாகும்.
2023-ஆம் ஆண்டின் ஜனவரி-ஜூன் காலகட்டத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 5,867-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது விற்பனை 21 சதவீதம் அதிகரித்துள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனம் 3,614 மோட்டாா்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது.
கடந்த ஜனவரி-ஜூன் காலகட்டத்தில் நிறுவனம் சொகுசு மின்சார காா் பிரிவில் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Copyrights © 2024 . All rights reserved. Powered by ♥ Redback
Unless otherwise indicated, all materials on these pages are copyrighted by Redback IT solutions. All rights reserved. No part of these pages, either text or image may be used for any purpose.